அதிமுக பொதுக்குழு கூட்டம் ஜூலை 11 ஆம் தேதி சென்னை வானரகத்தில் நடைபெறவுள்ளது.இதனை முன்னிட்டு,பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.அந்த வகையில்,பொதுக்குழு கூட்டத்தில் பங்கேற்பது தொடர்பாக அனைத்து பொதுக்குழு உறுப்பினர்களுக்கும் அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழு கூட்டத்திற்கு பாதுகாப்பு அளிக்க கோரி முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார்,பெஞ்சமின் ஆகியோர் தமிழக டிஜிபி அவர்களிடம் மனு அளித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து,செய்தியாளர்களிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்:”சட்ட ரீதியாக அதிமுக பொதுக்குழு நடைபெறவுள்ள நிலையில்,அதற்கு காவல்துறை பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று மனு அளிக்கப்பட்டுள்ளது.குறிப்பாக,தேவை இல்லாதவர்கள்,வேண்டாதவர்கள்,சமூக விரோதிகள் இவர்களெல்லாம் பொதுக்குழுவுக்கு வந்து,பொதுக்குழு கூட்டம் நடைபெறாமல் பிரச்சனை செய்யும் வாய்ப்பு இருக்கும் நிலையில்,அதனை எதிர்கொள்ள வேண்டிய சூழலை டிஜிபி அவர்களிடம் தெரிவித்துள்ளோம்.அதன்பின்னர்,மனுவை படித்த டிஜிபியும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார்.
கடந்த 23 ஆம் தேதி போல் அல்லாமல்,ஜூலை 11 ஆம் தேதி நடைபெறவுள்ள பொதுக்குழுவுக்கு முழு பாதுகாப்பை காவல்துறை வழங்கும் என்ற நம்பிக்கை உள்ளது”,என்று தெரிவித்துள்ளார்.
டெல்லி : வரும் 2036-ம் ஆண்டு நடைபெற உள்ள ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகளை இந்தியாவில் நடத்த சர்வதேச ஒலிம்பிக்…
சென்னை : இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமென்ட்டில் அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையை கதையை மையமாக வைத்து…
சென்னை -90 கிட்ஸ்க்கு பிடித்த பெட்டிக்கடை தேன் மிட்டாய் சுலபமான முறையில் வீட்டிலேயே செய்வது எப்படி என இந்த செய்தி…
திருவாரூர் : உலக நாடுகள், உலக மக்கள் என அனைவரும் பெரிதளவு எதிர்பார்க்கும் அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் சற்று…
சென்னை : சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம்.…
திருச்சி : ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு, தவெக மாநாடு என தமிழக அரசியல் வட்டாரத்தில் கூட்டணி ஆட்சி குறித்தும்,…