தமிழ்நாடு

நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு – அமைச்சர் மனோ தங்கராஜ்

Published by
லீனா

திமுக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்துஇயக்கம் தொடங்கியது.

திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த இயக்கம் குறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்தது.

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு என்பது கொண்டு வரப்பட்டது. அதை பாஜக பிடித்துக்கொண்டது. நீட் என்பது எப்படி சரியான மருத்துவரை உருவாக்கும் என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோராஜ், எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது. நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு.

வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும். எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும் இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. திமுக ஆன்மிகவாதிகளுக்கு எதிரான இயக்கம் என்று கூறுவது அப்பட்டமான பொய் என தெரிவித்துளளார்.

Published by
லீனா

Recent Posts

பஹல்காமில் நடந்தது என்ன? ”எங்களுக்கு உயிர் பயம் வந்துவிட்டது” – தப்பிய சுற்றுலாப் பயணிகள் உருக்கம்.!

சென்னை : ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் சுற்றுலாப் பயணிகள் மீது, கடந்த செவ்வாய்க்கிழமை தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. இதில்…

18 minutes ago

காஷ்மீரில் இருந்து சென்னை திரும்பிய தமிழக சுற்றுலா பயணிகள்.!

காஷ்மீர் மாநிலம் பெஹல்காமில் ஏப்ரல் 22ம் தேதி சுற்றுலா பயணிகள் மீதான தீவிரவாத தாக்குதலில் 26 கொல்லப்பட்டு, பலர் படுகாயம்…

47 minutes ago

என்னை கொலை பண்ணிருவேன்னு மிரட்டுறாங்க! போலீசில் புகார் கொடுத்த கவுதம் கம்பீர்!

டெல்லி : கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் உள்ள பஹல்காம் பகுதியில், பைசரன் புல்வெளியில் (Baisaran Meadow)…

1 hour ago

Live : பஹல்காம் பயங்கரவாத தாக்குதல் முதல் அரசியல் நிகழ்வுகள் வரை!

சென்னை : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக இன்று (ஏப்ரல் 24, 2025) டெல்லியில் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்…

2 hours ago

பயங்கரவாத தாக்குதல்…மொத்தம் 5 தீவிரவாதிகள், 3 பாகிஸ்தானியர்? விசாரணையில் வந்த முக்கிய தகவல்!

பஹல்காம் : ஏப்ரல் 22 அன்று ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் உள்ள பைசரன் புல்வெளியில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட…

2 hours ago

மயோனைஸ் பிரியர்கள் ஷாக்… “ஓராண்டு தடை”! தமிழ்நாடு அரசு உத்தரவு!

சென்னை : பச்சை முட்டை மற்றும் எண்ணெய் உள்ளிட்ட பொருட்களைக் கொண்டு உருவாக்கப்படுவது மயோனைஸ். இதனை மக்கள் சிக்கன் சாப்பிடுவதில் இருந்து…

3 hours ago