நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு – அமைச்சர் மனோ தங்கராஜ்

MInister Mano Thangaraj

திமுக அரசு தொடர்ந்து நீட் தேர்வுக்கு எதிரான செயல்பாடுகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 21-ஆம் தேதி சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி நீட் விலக்கு – நம் இலக்கு என்ற தலைப்பில் கையெழுத்துஇயக்கம் தொடங்கியது.

திமுக இளைஞரணி மற்றும் மகளிரணி சார்பில் 50 நாட்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறும் இயக்கத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கையெழுத்திட்டு துவக்கி வைத்தார். இந்த இயக்கம் குறித்து வரவேற்பும், விமர்சனங்களும் எழுந்தது.

இதற்கிடையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள், காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சியில் தான் நீட் தேர்வு என்பது கொண்டு வரப்பட்டது. அதை பாஜக பிடித்துக்கொண்டது. நீட் என்பது எப்படி சரியான மருத்துவரை உருவாக்கும் என்று கேட்டால் அதற்கு பதிலே இல்லை என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் மனோராஜ், எதற்கெடுத்தாலும் திமுகவை குற்றம் சொல்லும் சிலரை திருத்த முடியாது. நீட் எதிர்ப்பு என்பது திமுகவின் காலம் காலமான நிலைபாடு.

வட இந்தியாவில் மாணவ, மாணவிகள் நீட் தேர்வால் உயிரை மாய்த்துக்கொள்ளும் சம்பவங்களை புரிந்து கொண்டு சீமான் பேச வேண்டும். எல்லோரும் சமத்துவமாக சமமாக வாழ வேண்டும் இறை வழிபாட்டு முறை, சமத்துவத்தை சார்ந்து இருக்க வேண்டும் என்பது தான் திமுகவின் நிலைப்பாடு. திமுக ஆன்மிகவாதிகளுக்கு எதிரான இயக்கம் என்று கூறுவது அப்பட்டமான பொய் என தெரிவித்துளளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்