#Breaking : ஆளுநருக்கு எதிரான போராட்டம்.! விசிக தலைவர் திருமாவளவன் கைது.!
ஆளுநர் ரவிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக தலைவர் திருமாவளவன் உள்ளிட்டோர் கைது செய்யபட்டுள்ளனர்.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கடந்த 9ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் பேசுகையில் தமிழக அரசு தயாரித்து கொடுத்த உரையில் பல்வேறு பகுதிகளை விட்டு பேசினார். மேலும், தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னரே அவர் சட்டப்பேரவையை விட்டு வெளியேறினார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைக்கு திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆளுநரின் நடவடிக்கை எதிர்த்து, அவர் தமிழகத்தை விட்டு வெளியேற வேண்டுமென இன்று சென்னை, சின்னமலையில் விசிக தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
விசிக தலைவர் திருமாவளவன் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இடது சாரி கட்சிகளின் தலைவர்கள் முத்தரசன், சி.ராமகிருஷ்ணன், காங்கிரஸ் தலைவர் கோபண்ணா மற்றும் கட்சி தொண்டர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆளுநர் மாளிகையை முற்றுகையிட இவர்கள் ஏற்கனவே அனுமதி கேட்டிருந்தனர். அது மறுக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், 3 மணிநேர ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அவர்கள் ஆளுநர் மாளிகையை நோக்கி பேரணியை தொடர்ந்தனர்.
இதனை அடுத்து காவல்துறையினர் அவர்களை தடுத்தி நிறுத்தி விசிக தலைவர் திருமாவளவன் உட்பட போராட்டத்தில் ஈடுபட்ட அரசியல் தலைவர்களை கைது செய்து தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர். மாலை வரை தனியார் மண்டபத்தில் வைத்து இருந்துவிட்டு அதன்பிறகு விடுவிக்கப்படுவர் என தகவல் வெளியாகியுள்ளது.