முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்!

அதிமுகவின் முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன்.
வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக புகாரின் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மீது வேலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப் பதிவு செய்து, கடந்த ஜூலை 22ஆம் தேதி அவரது வீடு உள்ளிட்ட 20 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில் ரூ.25.56 லட்சம் பணம், சொத்து ஆவணம், பணப் பரிவர்த்தனை ஆவணங்கள் உள்ளிட்டவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்த நிலையில், முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு லஞ்ச ஒழிப்புத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
எம்.ஆர்.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் வரும் 30ஆம் தேதி ஆஜராகும்படி சம்மன் அனுப்பியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
KKR vs SRH : ஹைதராபாத்தின் மிரட்டல் பந்துவீச்சு! இறுதியில் பொளந்து கட்டிய கொல்கத்தா! டார்கெட் 201!
April 3, 2025
அமெரிக்க வரி விவகாரம் : “மத்திய அரசு என்ன செய்யப் போகிறது?” ராகுல் காந்தி சரமாரி கேள்வி!
April 3, 2025
“பாஜகவால் அதிகம் பாதிக்கப்பட்டது நானும், கேரள முதலமைச்சரும் தான்.!” மு.க.ஸ்டாலின் பேச்சு!
April 3, 2025