லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி அவர்கள் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களை சந்தித்துள்ளார்.
அதிமுக ஆட்சியின் போது உள்ளாட்சி துறை அமைச்சராக இருந்த எஸ்.பி.வேலுமணி, பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும், வருமானத்தை மீறி சொத்து சேர்த்ததாகவும் புகார் எழுந்தது. இதனையடுத்து எஸ்.பி.வேலுமணி தொடர்புடைய இடங்கள் மற்றும் அவரது உறவினர்கள் வீடுகள் என மொத்தம் 60 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
இதற்கிடையில்,முன்னாள் அமைச்சர் வேலுமணி எதிராக பல்வேறு முக்கிய ஆதாரங்கள் சிக்கி உள்ளதால் அவரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் தொடர்ந்து விசாரணை செய்து வருகின்றனர்.
இந்த நிலையில்,முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மற்றும் அவருடன் தொடர்புடையவர்களின் இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வரும் நிலையில் ஊழல் தடுப்பு & லஞ்ச ஒழிப்பு கண்காணிப்புத்துறை டிஜிபி கந்தசாமி,முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களை தலைமைச்செயலகத்தில் சந்தித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியின் இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நீடிக்கும் நிலையில்,இது தொடர்பாக,முதல்வருடன் டிஜிபி கந்தசாமி ஆலோசனையில் ஈடுபட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை -ஐயப்பனுக்கு மட்டும் ஏன் இருமுடி கட்டு காரணம் என்ன என்பதை பற்றியும் அதன் வரலாறு பற்றியும் இந்த பதிவில்…
சென்னை : குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக,…
கன்னியாகுமரி : கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டுடி சம்பர் 3ம் தேதி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து…
சென்னை : இயக்குனர் பாலா 'வணங்கான் ' என்ற படத்தை இயக்கி வருகிறார். 'வணங்கான்' படத்திலிருந்து சூர்யா விலகிய பிறகு,…
தூத்துக்குடி : முருகனின் அறுபடை வீடுகளில் 2வது புண்ணிய தலமாக விளங்குகிறது திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில். இங்கு நாள்தோறும்…
சென்னை : சென்னையில் சிக்னல்கள் மற்றும் மேம்பாலங்களின் அருகே உள்ள 100க்கும் மேற்பட்ட பேருந்து நிறுத்தங்களை 100 மீட்டர் தள்ளி…