கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை..!
கடலூரில் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில், ரூ.3 லட்சம் பறிமுதல்.
கடலூர் மாவட்டம் அண்ணா கிராம பகுதியில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். பொதுமக்களிடம் லஞ்சம் பெறுவதாக கிடைத்த தகவல் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த சோதனையில், கணக்கில் வராத ரூ.3 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த பணம் ஒப்பந்தக்காரர்களிடம் இருந்து லஞ்சமாக பெறப்பட்ட பணமாக இருக்கலாம் என்ற கோணத்தில், லஞ்சஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணையில் ஈடுபட்டு வருகிறனர்.