டிஎன்பிஎஸ்சி நியமனம்: பதில் தராவிட்டால் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணை- உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரிக்கை!
டிஎன்பிஎஸ்சி நியமனம் குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கவில்லை என்றால், ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை எச்சரித்துள்ளது.
டிஎன்பிஎஸ்சி குரூப் 1 நியமனத்தில் தமிழ் வழியில் கற்றோருக்கான 20 சதவீத இட ஒதுக்கீட்டில் தமிழ் பயின்றவர்களை தவிர்த்து, கல்லூரிக்குச் சென்று பட்டம் பெற்றவர்களை மட்டும் கொண்டு குரூப் 1 நியமனத்தை நடத்த வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு, விசாரணைக்கு வந்தது.
அப்பொழுது, வெளிமாநில பல்கலைக்கழகங்களில் தமிழ்வழியில் தொலைதூர கல்வியில் படித்து ஒதுக்கீட்டின் மூலம் எத்தனை பேர் வேலைக்கு சேர்ந்தவர்கள்?, கல்லூரிகளுக்கு நேரடியாக சென்று தமிழ் வழி கல்வி கற்று இட ஒதுக்கீட்டில் சேர்ந்தவர்கள் எத்தனை பேர்? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினார்கள். மேலும், இதுகுறித்து தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் பதிலளிக்கவில்லை என்றால் ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணைக்கு பரிந்துரைக்க நேரிடும் என நீதிபதிகள் எச்சரித்து, இந்த வழக்கு விசாரணையை டிசம்பர் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.