திண்டுக்கல்லில் அரசு மருத்துவரிடம் லஞ்சமாக ரூ.51 லட்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி ஒருவர் கையும், களவுமாக கைது செய்யப்பட்டார். சொத்துகுவிப்பு தொடர்பான வழக்கில் இருந்து விடுவிக்க மருத்துவர் சுரேஷ் பாவிடம் லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி கைது செய்யப்பட்டார்.
மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அவர் மீதான வழக்கை முடித்து தருவதாக கூறி, முதலில் ரூ.20 லட்சம் பெற்ற நிலையில், மீதமுள்ள ரூ.31 லட்சத்தை வாங்கியபோது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் சிக்கினார். பணத்துடன் காரில் தப்ப முயன்ற அமலாக்கத்துறை அதிகாரியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த நிலையில், அவரிடம் மாவட்ட எஸ்பி விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
உச்சநீதிமன்றம் கண்டனம்! 31 பேரை விடுதலை செய்ய ஆளுநர் ரவி ஒப்புதல்!
திண்டுக்கல் தோமையார்புரம் அருகே லஞ்ச பணத்தை பெற்று காரில் வைத்து தப்ப முயன்றபோது லஞ்ச ஒழிப்புத்துறையினர் மடக்கி பிடித்தனர். லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயன பவுடர் தடவிய பணத்தை மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் கொடுத்து அனுப்பியிருந்த நிலையில், லஞ்சம் பெற்ற அமலாக்கத்துறை அதிகாரி பிடிபட்டார்.
அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரி ரூ.31 லட்சம் லஞ்சம் கேட்டது குறித்து மருத்துவர் சுரேஷ் பாபு காவல்துறையிடம் புகார் தெரிவித்திருந்தார்., ரசாயன பவுடர் தடவிய ரூபாய் நோட்டுகளை சுரேஷிடம் கொடுத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் அங்கிட் திவாரியை வளைத்து பிடித்தனர். லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கிட் திவாரியிடம் திண்டுக்கல் மாவட்ட எஸ்பி விசாரணை நடத்தி வருகிறார்.
இதனிடையே, மதுரை அமலாக்கத்துறை அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடைபெற்று வருகிறது. இன்று காலை திண்டுக்கலில் ரூ.31 லட்சம் லஞ்ச பணத்துடன் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி பிடிபட்டதை அடுத்து. இந்த சோதனை நடைபெறுகிறது. அங்கித் திவாரியின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டுள்ளது.
டெல்லி : எய்ம்ஸ் மருத்துவமனையில் உடல்நல குறைவு காரணமாக முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் சிகிச்சை பெற்று வந்த நிலையில்,…
வதோதரா : இந்திய மகளிர் கிரிக்கெட் அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி0 போட்டிகள், 3 ஒரு…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த…
தூத்துக்குடி : சென்னையில் உள்ள அண்ணா பல்கலைகழகத்தில் மாணவிக்கு நடந்த பாலியல் வன்கொடுமை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தில்…
சென்னை :முளைக்கட்டிய பச்சைபயிறு முட்டை மசாலா செய்வது எப்படி இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருள்கள்; முளைகட்டிய பச்சைப்பயிறு-…
இலங்கை : தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன்பிடித்ததால் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர், மீனவர்கள் தடை செய்யப்பட்ட வலைகளை…