சோழிங்கநல்லூர் கட்டடம்.. ரூ.12 கோடி லஞ்சம்.! அரசு அதிகாரிகள் மீது லஞ்சஒழிப்புத்துறை வழக்குப்பதிவு.!
சோழிங்கநல்லூரில் புதிய கட்டடம் கட்டியது தொடர்பாக சிஎம்டிஏ அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக லஞ்சஒழிப்புதுறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2011 முதல் 2016 காலகட்டத்தில் தனியார் கட்டுமான நிறுவனமான காக்னிசண்ட் நிறுவனமானது சென்னை, சோழிங்கநல்லூரில் புதிய கட்டடங்கள் நிறுவப்பட்டன. அந்த விவகாரத்தில் அரசு அதிகாரிகள் லஞ்சம் பெற்றதாக தற்போது புகார்கள் எழுந்ததுள்ளது.
லஞ்சஒழிப்புத்துறை :
இந்த புதிய கட்டடத்திற்கு அனுமதி கேட்டு விண்ணப்பிக்கையில், காலம் தாழ்த்தப்பட்ட காரணத்தால் லஞ்சம் பெறுவதற்கு அது காரணமாக அமைந்தது என லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர்.
12 கோடி ரூபாய் :
இதன் காரணமாக 2011 – 2016 காலகட்டத்தில் சிஎம்டிஏ பிரிவில் இருந்த அரசு அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் மொத்தம் 12 கோடிரூபாய் லஞ்சம் பெறப்பட்டதாக தகவல்கள் தெரிவிகின்றன.