இரண்டாவது நாளாக கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை…!

இரண்டாவது நாளாக கோவை கேசிபி நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
நேற்று காலை முதல் அதிமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணிக்கு சொந்தமான இடங்கள் மற்றும் அலுவலகங்கள், அவருக்கு நெருக்கமான சிலருக்கு சொந்தமான இடங்கள் என 60 இடங்களில் லஞ்ச ஒழிப்புத் துறை அதிரடியாக சோதனை நடத்தினர். இந்நிலையில் கோவை பீளமேட்டில் உள்ள கேசிபி நிறுவனத்திலும் நேற்று சோதனை நடத்தப்பட்டது.
நேற்று காலை தொடங்கிய சோதனை நள்ளிரவு வரை நடைபெற்ற நிலையில், இன்று காலையும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் கேசிபி நிறுவனத்தில் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். டெண்டர் முறைகேடு புகாரின் அடிப்படையில் கோவை கேசிபி எஞ்சினியர்ஸ் நிறுவனத்தில் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த சோதனையில் சில முக்கியமான ஆவணங்கள் கிடைத்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
”இந்திய – பாகிஸ்தான் போர் நிறுத்தத்திற்கு ஒப்புதல்” – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு.!
May 10, 2025
”பாகிஸ்தான் பயங்கரவாததிகள் மீண்டும் தாக்குதல் நடத்தினால் இனி போராக கருதப்படும்” – மத்திய அரசு அறிவிப்பு.!
May 10, 2025
”கான்சர்ட் தொகையையும், ஒரு மாத சம்பளத்தையும் தேசிய பாதுகாப்பு நிதிக்கு தருகிறேன்” – இளையராஜா.!
May 10, 2025