பொள்ளாச்சியில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு கொடூரமான பாலியல் துஷ்பிரயோகம் தமிழ்நாட்டை உலுக்கியது. இப்போது, மற்றுமொரு பெண் புதிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார், முன்னாள் காதலன் தன்னை அவமானப்படுத்தி, பணத்தை பறிக்க அச்சுறுத்தலுக்கு ஆளாக்கி, அவ்வப்போது பாலியல் ரீதியாக சீண்டியதாக கூறியுள்ளார்.
அந்த பெண் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், இந்த கொடுமையை செய்தவனின் பெயரை குறிப்பிடவில்லை. இருந்தாலும், அவர் பேருந்து நிறுவனத்தில் வேலைபார்ப்பதாகவும், அதில் ரேஷன் பொருட்கள், கஞ்சா போன்ற போதை பொருட்களை கடத்துவான் என்றும் குறிப்பிட்டார். அவனை விசாரித்தால் மேலும் பல விவரங்கள் தெரியவரும் எனவும் தைரியமாக தெரிவித்தார்.
இந்த புகாரை அளித்த பின், பிற பாதிக்கப்பட்டவர்கள் அவரிடம் தொடர்பு கொண்டதாகவும், ஆனால் அவர்கள் அதிகாரிகளுக்கு செல்ல விரும்பவில்லை என்றும் கூறினார்.”சுமார் 15 பெண்கள் என்னிடம் பேசினர்,” என்று அவர் பேட்டியில் கூறினார்.
பொள்ளாச்சி வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நான்கு பேர், என்னை எந்த விதத்திலும் சீண்டவில்லை. நான் கூறுவது முற்றிலும் வேறு நபர்கள் அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும், அவர்கள் இவர்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கிறேன் எனவும் தெரிவித்தார்.
சவுதி : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்திற்கு ரசிகர்களிடையே மிகுந்த வரவேற்பு என்பது இருந்து வந்தது. இந்த நிலையில்,…
சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
சென்னை : தெலுங்கர்கள் அந்தப்புரத்து சேவகர்கள் என்ற நடிகை கஸ்தூரியின் சர்ச்சைப் பேச்சு தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.…
நாகப்பட்டினம் : நாகை மற்றும் திருமருகல் ஒன்றியத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு நாளை (நவ.06] உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சிக்கல் சிங்காரவேலர்…
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் அரசு மற்றும் கழக நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று வருகை தந்த போது, துணை…
சென்னை : தெலுங்கு பேசும் மக்கள் குறித்த சர்ச்சை பேச்சுக்கு நடிகை கஸ்தூரி பகிரங்க மன்னிப்புக் கோரியுள்ளார். தெலுங்கர்கள் அந்தப்புரத்து…