சென்னை ஐஐடியில் மேலும் ஒரு மாணவர் தற்கொலை!
சென்னை ஐஐடியில் மேலும் மாணவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதால் பரபரப்பு.
சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி வளாகத்தில் பி.டெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக தகவல் கூறப்படுகிறது. பி.டெக் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர் கேதார் சுரேஷ் என்பவர் விடுதியில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
விடுதியில் இருந்து அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் மாணவர் தற்கொலை குறித்து கோட்டூர்புரம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. கடந்த 3 மாதத்தில் சென்னை ஐஐடியில் நிகழ்ந்த 4-ஆவது தற்கொலை சம்பவம் இதுவாகும். இது மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.