காலிப்பணியிடங்களை நிரப்புதல், பழைய ஓய்வூதியத் திட்டம் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி போக்குவரத்து தொழிற்சங்கங்கள், அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில் எந்த உடன்பாடும் எட்டப்படாததால் ஜனவரி 9 ஆம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடப் போவதாகப் போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவித்திருந்தன. இதைத்தொடர்ந்து, திட்டமிட்டபடி போக்குவரத்து ஊழியர்கள் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வேலை நிறுத்தப் போராட்டத்திற்கு தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில் மூத்த வழக்கறிஞர் பி.ஆர். ராமன் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு இன்று காலை விசாரணைக்கு வந்தபோது தலைமை நீதிபதி அமர்வு கூறியதாவது, “போராட்டம் நடத்த உரிமை உள்ளது. ஆனால், பண்டிகை நேரத்தில் போராட்டம் நடத்துவது முறையற்றது. வேலைநிறுத்ததால் அதிகம் பாதிக்கப்படுவது மக்கள் தான்.
போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்..!
அரசும், போக்குவரத்துக்கு தொழிற்சங்கமும் ஏன் இந்த விவகாரத்தில் பிடிவதாகமாக இருக்கிறீர்கள், பொங்கல் பண்டையொட்டி மக்களின் இடையூறு ஏற்படுத்தாமல் போராட்டத்தை ஒத்திவைக்க தலைமை நீதிபதி அறிவுறுத்தி வழக்கை பிற்பகல் 2.15 மணிக்கு தள்ளிவைத்தனர். இந்த வழக்கு மீண்டும் பிற்பகல் விசாரணைக்கு வந்தது. அப்போது,” உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலை ஏற்று ஜனவரி 19 வரை வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளனர்.
நாளை முதல் பணிக்கு திரும்புவதாக போக்குவரத்து சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்தனர். அதேநேரத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட போக்குவரத்து தொழிலாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என போக்குவரத்து கழகத்திற்கு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் தமிழ்நாடு முழுவதும் இரண்டு நாட்களாக நடைபெற்று வந்த வேலை நிறுத்த போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்தது.
போராட்டம் வாபஸ்…. ஜன.19ல் மீண்டும் முத்தரப்பு பேச்சுவார்த்தை – அமைச்சர் சிவசங்கர்
இந்நிலையில், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது ஜனவரி 19-ம் தேதி அரசு சார்பில் நடத்தப்படும் பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தால் ஜனவரி 20 முதல் மீண்டும் வேலை நிறுத்தத்தை தொடங்குவோம். அண்ணா தொழிற்சங்கத்தை சார்ந்தவர்கள் நாளை முதல் பணிக்கு செல்வார்கள் என தெரிவித்தார்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…