#BREAKING: சாத்தன்குளத்தில் மேலும் ஒரு கொலை.? டிஜிபி பதிலளிக்க உத்தரவு.!

சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் இறந்ததாக தொடரப்பட்ட வழக்கில் டிஜிபி, உள்துறை செயலர் பதிலளிக்க நோட்டீஸ்.
சாத்தான்குளம் காவல்நிலையத்தில் காவல் துறையினர் தாக்குதலில் மகேந்திரன் என்பவர் உயிரிழந்தார் என புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தக் கோரி மகேந்திரனின் தாயார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் இந்த வழக்கு தொடர்பாக டிஜிபி, உள்துறை செயலர் பதிலளிக்கவும், காவல் ஆய்வாளராக இருந்த ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்தது.
ஏற்கனவே தந்தை மகன் வழக்கில் காவல் ஆய்வாளர்கள் ஸ்ரீதர் மற்றும் ரகு கணேஷ் ஆகியோர் 15 நாள்கள் நீதிமன்ற காவலில் உள்ளனர்.