கிருஷ்ணகிரியில் தனது மகள் காதல் திருமணம் செய்ததால், திருமணம் செய்த நபரை நடு ரோட்டில் பெண்னின் தந்தை வெட்டி கொலை செய்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கிட்டம்பட்டி கிராமத்தை சேர்ந்த ஜெகன் எனும் 28 வயது இளைஞரும், அவதானப்பட்டி அருகே உள்ள முழுக்கான் கொட்டாய் பகுதியை சேர்ந்தவ சரண்யா எனும் 22 வயது இளம்பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். இருவரும் ஒரே சமுதாயத்தை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது .
காதல் திருமணம் :
இந்த காதல் விவகாரத்துக்கு சரண்யாவின் அப்பா சங்கர் உட்பட பெண்ணின் வீட்டார் எதிர்ப்பு தெரிவித்து வந்துள்ளனர். இந்த எதிர்ப்பையும் மீறி கடந்த மாதம் காதல் ஜோடி கோவிலில் திருமணம் செய்துகொண்டு ஜெகன் வீட்டு சம்மதத்தோடு வாழ்ந்து வந்துள்ளனர்.
நடுரோட்டில் கொலை :
இதனால் கோபமடைந்த சரண்யாவின் தந்தை சங்கர் திட்டமிட்டு, டைல்ஸ் ஓட்டும் வேலைக்கு ஜெகன் கிருஷ்னகிரி அணை அருகே மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த போது வழிமறித்து அரிவாள் உள்ளிட்ட பயங்கர ஆயுதங்கள் கொண்டு தாக்கியுள்ளார்.
சாலை மறியல் :
நேற்று நண்பகலில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. சங்கர் உட்பட கூட்டாளிகள் பயங்கரமாக தாக்கியதில் ஜெகன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து ஜெகனின் உறவினர்கள் சம்பவ இடத்திற்கு வந்து குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சங்கர் சரண் :
இதனை தொடர்ந்து காவல் துறையினர் ஜெகன் கொலை சம்பந்தமாக சரண்யாவின் அப்பா சங்கர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்தனர். இதில் சங்கர் காவல்துறையில் நேரடியாக சரண் அடைந்துள்ளார். மற்றவர்களை தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
தெலங்காணா: 'புஷ்பா 2' திரைப்படத்தின் சிறப்பு கட்சியை பார்க்க ரசிகை ஒருவர் உயிரிழந்த விவகாரத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் மீது,…
டெல்லி: யூடியூப் உலகின் பல்வேறு மக்களுக்கு பணம் சம்பாதிப்பதற்கு மட்டும் இல்லாமல், மக்களுக்கு தேவையான வீடியோக்களை பார்ப்பதற்கும் ஒரு சமூக…
சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில், திமுக…
தை அமாவாசை 2025-ல் வரும் தேதி மற்றும் அதன் சிறப்புகளை இந்த செய்தி குறிப்பில் காணலாம். சென்னை :அமாவாசை என்றாலே…
ஜெய்சால்மர் : ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மேரில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று நடைபெற்ற 55-வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டத்தில்,…
சென்னை: தமிழகம் முழுவதும் நீதிமன்றங்களில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட DGP சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். திருநெல்வேலி…