முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது மேலும் ஒரு மோசடி புகார்!

முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேலும் ஒரு மோசடி புகார்.
அரசு வேலை வாங்கித் தருவதாக பல பேரிடம் ரூ.2 கோடி வரை பெற்று மோசடி செய்துவிட்டதாக, முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீது சிவகங்கையை சேர்ந்த சண்முகநாதன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜியின் உதவியாளர் எனக்கு நல்ல நண்பர். அரசு வேலை வாங்கி தருவதாக அவர் சொன்னதன் பேரில், 39 பேரிடம் ரூ.2 கோடி அளவுக்கு வசூல் செய்து கொடுத்ததாக கூறியுள்ளார்.
இதுகுறித்து அமைச்சராக இருந்த ராஜேந்திரபாலாஜியிடமும் கேட்டேன். அவரும் வேலை வாங்கி தருவதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி அரசு வேலை யாருக்கும் வாங்கி கொடுக்கவில்லை, பணத்தையும் திருப்பி கொடுக்கவில்லை. எனவே, அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு மோசடி செய்த முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அவரது உதவியாளர் சுதாகர் மற்றும் அவரது மனைவி தேவிஸ்ரீ ஆகியோர் மீது உரிய நடவடிக்கை எடுத்து பணத்தை பெற்று தர வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.