பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் கைது.
தமிழகத்தில் நெல்லை, மதுரை, சிவகங்கை, திருவாரூர், தேவகோட்டை உள்ளிட்ட தென் தமிழக பகுதிகளில் பல்வேறு கிளைகளுடன் செயல்பட்டு வந்த நியோமேக்ஸ் நிதி நிறுவனமானது, தங்கள் பயனர்களுக்கு அதிக வட்டி தருவதாகவும், குறிப்பிட்ட வருடத்திற்கு பிறகு பணம் இரட்டிப்பாகும் என கூறி சுமார் 70 ஆயிரம் பேரிடம் முகவர்கள் மூலம் ஆசை வார்த்தைகள் கூறி பணம் வசூல் செய்துள்ளது.
இதன் பின்னர் பணத்தை கட்டியவர்கள் தங்கள் பணம் திரும்ப கொடுக்கப்படாததை அடுத்து, பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் 100-க்கும் மேற்பட்டோர் புகார் அளித்தனர். இந்த புகாரை அடுத்து பொருளாதர குற்றப்பிரிவு காவல்துறை சில மாதங்களுக்கு முன் தென் மாவட்டத்தில் 17 இடஙக்ளில் சோதனை மேற்கொண்டனர். இதில் சுமார் ரூ.22கோடி வரையில் மோசடி நடந்ததாக கூறப்பட்டது.
நியோ மேக்ஸ் நிறுவன இயக்குனர்கள், முகவர்கள் என 10க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து, சமீபத்தில் நியோமேக்ஸ் நிதி நிறுவனத்தின் விருதுநகர், சிவகங்கை, மதுரை, திருவாரூர், நெல்லை உள்ளிட்ட 18 இடங்களில் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், அதிக வட்டி தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் நியோமேக்ஸ் நிறுவனத்தின் மற்றொரு இயக்குநர் பத்மநாபன். மதுரையை சேர்ந்த பத்மநாபனை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே, கிளை இயக்குநர்கள் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமை இயக்குநர்களை போலீஸ் தேடி வருவதாகவும் கூறப்படுகிறது.
ஹைதராபாத் : தெலுங்கு மக்கள் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த நடிகை கஸ்தூரி தற்போது ஹைதராபாத்தில்…
பீகார் : ஹாக்கியில் மகளிருக்கான 8-வது ஆசிய கோப்பைத் தொடரானது தற்போது பீகாரில் உள்ள ராஜ்கிரில் நடைபெற்று வருகிறது. இந்த…
மாஸ்கோ : கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி முதல், நோட்டோ அமைப்பு நாடுகளுடன் உக்ரைன் இணையக் கூடாது…
சென்னை : வரும் நவம்பர் 20-ஆம் தேதி நயன்தார-விக்னேஷ் சிவன் இருவரின் திருமண வீடியோ நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாக இருக்கிறது.…
மும்பை : இந்திய அணி, ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் அடங்கிய டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வளிமண்டல காற்றழுத்த சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் தென்மாவட்டங்களில் ஒரு…