தமிழக சமூக சீர்திருத்த அரசியல் வரலாற்றில் மற்றுமொரு திருநாள் – சு.வெங்கடேசன்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 58 அர்ச்சகர்களும் பணி நியமன ஆணை வழங்கியது தொடர்பாக சு.வெங்கடேசன் ட்வீட்.
சென்னை ஆர்.டி.எம். புரத்தில் அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் திட்டத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் இந்து சமய அறநிலையத்துறைஅமைச்சர் சேகர்பாபு, அமைச்சர் கே.என். நேரு, குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
இந்த நிகழ்வில், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பயிற்சி முடித்த 24 அர்ச்சகர்கள் உட்பட 58 அர்ச்சகர்களும் பணி நியமன ஆணை வழங்கினார். இதுகுறித்து எம்.பி. சு.வெங்கடேசன் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்ற பட்டியலின மாணவர்கள் ஐந்து பேர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நியமித்து ஆணை வழங்கினார் முதல்வர் . தமிழக சமூக சீர்திருத்த அரசியல் வரலாற்றில் மற்றுமொரு திருநாள்.’ என பதிவிட்டுள்ளார்.
குன்றக்குடி அடிகளார், பேரூர் அடிகளார் முன்னிலையில், அர்ச்சகர் பயிற்சிப் பள்ளியில் பயிற்சிபெற்ற பட்டியலின மாணவர்கள் ஐந்து பேர் உள்பட 58 பேரை அர்ச்சகர்களாக நிமித்து ஆணை வழங்கினார் @CMOTamilnadu .
தமிழக சமூக சீர்திருத்த அரசியல் வரலாற்றில் மற்றுமொரு திருநாள். #Equality pic.twitter.com/QJe66K4br2
— Su Venkatesan MP (@SuVe4Madurai) August 14, 2021