மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தன!!
மேலும் 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளது என்று சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதுவரை 53.03 லட்சம் கோவிஷீல்டு, 8.82 லட்சம் டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் வந்துள்ளன. 4.1 லட்சம் கோவிஷீல்டு, 1.84 லட்சம் கோவாக்சின் என மொத்தம் 4.1 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
இந்த நிலையில், தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு ஏற்பட்டதை அடுத்து புனேவில் இருந்து 6 லட்சம் டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகள் வந்துள்ளன. சென்னை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள சேமிப்பு கிடங்கில் தடுப்பு மருந்துகள் வைக்கப்பட்டு, பற்றாக்குறை மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்படும் என கூறியுள்ளனர்.