தமிழகத்திற்கு மேலும் 50,000 கோவாக்சின் தடுப்பூசி வந்தன..!
தமிழகத்துக்காக 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்தன.
இந்தியாவில் கொரோனாவின் 2-வது அலையால் முதல் அலையை விட அதிகமானோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனால், நாடு முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பொதுமக்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. தற்போது பொதுமக்களுக்கு கோவிஷீல்டு, கோவாக்சின் ஆகிய 2 நிறுவனங்களின் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், தமிழகத்துக்காக 50 ஆயிரம் கோவாக்சின் தடுப்பூசிகள் சென்னைக்கு வந்தடைந்தன. மேலும் 3.50 லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் இன்று சென்னைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.