செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து மேலும் 500 கனஅடி திறப்பு.!

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து வினாடிக்கு மேலும் 500 கனஅடி திறக்கப்பட்டுள்ளது.
தற்போது, 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிவர் புயல், தற்போது 11 கி.மீ. வேகத்தில் வருகிறது. தொடர் கனமழையால் நீர் அதிகரித்ததால் முன்னெச்சரிக்கை அறிவிப்பாக 24 அடி கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்மட்டம் 22 அடியே நெருங்கியதால் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 2015 ஆம் ஆண்டு வெள்ளப்பெருக்கின் போது திறக்கப்பட்ட நிலையில் ஐந்து ஆண்டுக்கு பிறகு மீண்டும் திறக்கட்டுள்ளது.
ஏற்கனவே, செம்பரம்பாக்கம் அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் தற்போது கூடுதலாக 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால், செம்பரம்பாக்கம் ஏரியில் தண்ணீர் திறப்பால் அடையாறு ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அடையாறு ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு செல்வதால் குடியிருப்புகுள் தண்ணீர் புகுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
பொள்ளாச்சி வழக்கு : 9 பேரும் குற்றவாளி என அறிவிப்பு!
May 13, 2025
அமெரிக்காவின் தலையீடு குறித்து எதுக்கு பேசல? பிரதமரிடம் கேள்வி எழுப்பிய ஜெய்ராம் ரமேஷ்!
May 13, 2025
அச்சப்படாதீங்க மக்களே வெளியே வாங்க…தைரியம் கொடுத்த ஜம்மு-காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா!
May 12, 2025