நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக சென்னை ஐஐடி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது என்று மத்திய அரசு அறிவிப்பு.
தேசிய கல்வி நிறுவன தரவரிசை பட்டியலை மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் வெளியிட்டார். மத்திய கல்வி அமைச்சகம் வெளியிட்டுள்ள நாட்டின் சிறந்த கல்வி நிறுவனங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம் பெற்றுள்ளது. அதேபோல் நாட்டின் சிறந்த பொறியியல் கல்லுரிகள் பட்டியலிலும் சென்னை ஐஐடி முதலிடம் பிடித்துள்ளது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
சிறந்த ஆராய்ச்சி நிறுவனங்களுக்கான பட்டியலில் சென்னை ஐஐடி இரண்டாவது இடம் பிடித்துள்ளது. நாட்டின் சிறந்த மருத்துவ கல்லூரிகள் பட்டியலில் டெல்லி எய்ம்ஸ் முதலிடம் பிடித்த நிலையில், வேலூர் கிறிஸ்துவ கல்லூரி மூன்றாவது இடம் பிடித்துள்ளது. நாட்டின் சிறந்த பல்கலைக்கழகம் தரவரிசையில் கோவை அமிர்தா விஸ்வ வித்தியாபீடம் பல்கலைக்கழகம் நான்காவது இடம் பெற்றுள்ளது.
இதுபோன்று சிறந்த கல்லூரிக்கான பட்டியலில் சென்னை லயோலா கல்லூரி 3வது இடத்தில் உள்ளது. கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசையில் அண்ணா பல்கலைக்கழகம் 14வது இடத்தில் உள்ளது. கலை மற்றும் அறிவியல் கல்லுரிகளுக்கான பட்டியலில் மாநில கல்லூரி 5வது இடத்திலும், லயோலா கல்லூரி 6வது இடத்திலும் உள்ளது என மத்திய கல்வி அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஜெய்ப்பூர் : ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெறும்…
நெதர்லாந்த் : நடிகர் அஜித் குமார் தற்போது நெதர்லாந்தில் நடைபெற்று வரும் GT4 ஐரோப்பிய கார் ரேஸில் பங்கேற்று வருகிறார்.…
ஜெய்ப்பூர் : ஐபிஎல் தொடரின் 59வது போட்டியில், இன்று ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் மைதானத்தில், சஞ்சு சாம்சன் தலைமையிலான…
தூத்துக்குடி : தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே உள்ள ஒரு பகுதியில், நேற்று ஒரு கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரமாக…
ததஞ்சாவூர்: தமிழ்நாட்டின் தஞ்சாவூர் மாவட்டம் திருவோணம் அருகே நெய்வேலி தென்பதியில் உள்ள ஒரு பட்டாசு குடோனில்ஏற்பட்ட வெடி விபத்தில் 2…
சென்னை : தமிழகத்தில் சாலையோரங்களில் உள்ள கிணறுகள் மற்றும் பள்ளங்கள் குறித்து ஆய்வு செய்ய மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர்…