தமிழகத்தில் வரும் ஞாயிறு முழு ஊரடங்கு என்பதால் நியாய விலைக்கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா மற்றும் ஓமைக்ரான் பரவல் காரணமாக இரவு ஊரடங்கு நேற்று முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வரும் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், முழு ஊரடங்கால் வரும் 9ம் தேதி நியாய விலைக்கடைகள் செயல்படாது எனவும் டோக்கன் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதிக்கு முன்பாக பொருட்களை விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையாளர் ராஜாராமன் அனைத்து மாவட்ட ஆட்சித்தலைவர்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் பொருட்டு வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பொது வினியோக திட்ட நியாய விலைக்கடைகள் வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று செயல்பாடு என தெரிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர்கள்/துணை ஆணையாளர் சூழல்நிலைகேற்ப வரும் ஞாயிற்றுக்கிழமை அன்று பொங்கல் பரிசு பெற டோக்கன் பெற்ற அட்டைதாரர்களுக்கு 13-ம் தேதிக்கு முன்பாக வினியோகம் நடைபெற உரிய நடவடிக்கை மேற்கொள்ள கோரப்படுகிறது என தெரிவித்துள்ளார்.
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்றது.…
நெல்லை : 2023ஆம் ஆண்டு நாங்குநேரியில் தாக்குதலுக்குள்ளான பட்டியலின மாணவன் சின்னதுரை மீது, மர்ம நபர்கள் மீண்டும் தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
டெல்லி : ஐபிஎல் தொடரின் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையேயான அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்று…
சென்னை : கடந்த மார்ச் 7ம் தேதி தவெக சார்பில் சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடத்தப்பட்ட இப்தார் நோன்பு…
டெல்லி : ஐபிஎல் 2025 -இன் 3-2வது போட்டி இன்று டெல்லி கேபிடல்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கு இடையே…
சென்னை : அஜித் -ஆதிக் கூட்டணியில் வெளியான 'குட் பேட் அக்லி' படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அஜித்தின்…