#BREAKING: நிவர் புயல் முழுமையாக கரையை கடந்தது.. ஆர்.பி. உதயகுமார் அறிவிப்பு!
நேற்று இரவு 10.30 மணிக்கு கரையை கடக்கத் தொடங்கிய ‘நிவர்’ புயல், இன்று அதிகாலை 3.58 மணிக்கு முழுமையாக கரையை கடந்தது எனவும், தெற்கு திசையில் எதிர்பார்த்த நிலையில், புதுச்சேரிக்கு வடக்கே 30 கி.மீ தொலைவில் நிவர் புயல் கரையை கடந்தது என அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் அறிவித்தார்.
நிவர் புயலின் மையப்பகுதி பாண்டிச்சேரி அருகே நேற்று இரவு 11.30 மணி முதல் இன்று அதிகாலை 2.30 மணிக்குள் கரையை கடந்தது. அதி தீவிர புயலாக இருந்த நிவர் தீவிர புயலாக மாறி கரையை கடந்தது. அடுத்த 6 மணி நேரத்தில் ‘நிவர்’ புயல் தீவிர புயலில் இருந்து புயலாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிவர் புயல் தற்போது நிலப்பகுதிக்குள் நகர்ந்து வருகிறது. தொடர்ந்து வலுவிழந்து வருகிறது.