தமிழகம் முழுவதும் 97.7% பேருந்துகள் இயக்கப்படுவதாக அறிவிப்பு!
ஊதியம், அகவிலைப்படி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், தமிழகம் முழுவதும் 97.7 சதவீத பேருந்துகள் இயக்கப்படுவதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னையில் மாநகர பேருந்து 97.68 சதவீதம் இயக்கப்படுகின்றன. விழுப்புரம் பணிமனைகளில் இருந்து 1779 பேருந்துகளில் 1763 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், சேலம் பணிமனைகளில் இருந்து 794 பேருந்துகளில் 775 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும், கோவை பணிமனைகளில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் 1870 பேருந்துகளில் 1787 பேருந்துகள் இயக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2வது நாளாக வேலை நிறுத்தம்…! 30% போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ வழங்க நடவடிக்கை!
மொத்தம் இயக்கப்பட வேண்டிய 15,226 பேருந்துகளில் 14,888 பேருந்துகள் இயக்கப்படுகின்றன என போக்குவரத்துத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, தமிழகத்தில் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை காலம் நேரத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இதனால் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என அரசு வலியுறுத்தி, கடும் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. இன்று இரண்டாவது நாள் போராட்டமும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் 30 சதவீத போக்குவரத்து தொழிலாளர்களுக்கு மெமோ வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.