பாமக விருப்ப மனு தாக்கல் செய்ய தேதி அறிவிப்பு..!
தேர்தலில் பாமக சார்பில் போட்டியிட வரும் 23-ஆம் தேதி முதல் விருப்ப மனு தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாமக தலைவர் ஜி.கே.மணி வெளியிட்டுள்ள அறிக்கையில், 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட விரும்புவோரிடம் பிப்ரவரி 23-ம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்படள்ளன. சென்னை தியாகராயநகர் பர்கிட் சாலையில் உள்ள பாட்டாளி மக்கள் கட்சியின் மண்டல அலுவலகத்தில் இவ்விருப்ப மனுக்கள் பெற்றுக்கொள்ளப்படும்.
வரும் 23-ம் தேதி செவ்வாய்க்கிழமை காலை 10.30 மணி முதல் 26-ம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 5 மணி வரை விருப்ப மனுக்களை மேற்கண்ட அலுவலகத்தில் பெற்று, நிரப்பி உரிய ஆவணங்களுடன் தாக்கல் செய்யலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுத்தொகுதியில் போட்டியிட விரும்புபவர்கள் ரூ.10,000 தனி தொகுதியில் போட்டியிட விரும்புவோர் ரூ.5000 அனைத்து தொகுதிகளிலும் போட்டியிட விரும்பும் பெண்கள் ரூ.5000 வீதம் செலுத்தவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.