மாற்றுத்திறனாளிகள் நலனுக்காக சேவையாற்றியவர்களுக்கு மாநில விருது அறிவிப்பு..!
மாற்றுத்திறனாளி நலனுக்காக சிறந்த சேவை புரிந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதை தமிழக அரசு அறிவித்து.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின விழாவின் போது மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக தொண்டாற்றியதற்காக கீழ்கண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கு மாநில விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
1) மாவட்ட ஆட்சித் தலைவர்.
2) மருத்துவர்.
3) வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம்.
4) அரசு சாராத தொண்டுநிறுவனம்.
5) சேவைபுரிந்த சமூகப் பணியாளர்.
8) சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி.
2021 ஆம் ஆண்டு சுதந்திர தின விழாவின் போது தமிழக அரசின் மாநில விருதுகள் வழங்குவதற்கென, மாற்றுத் திறனாளிகள் நலனுக்காக சிறப்பாக சேவை புரிந்த நபர்கள்/ நிறுவனங்களிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களிலிருந்து தகுதி வாய்ந்த நபர்கள் மற்றும் நிறுவனங்களை தேர்வு செய்யும் பொருட்டு 08.072021 அன்று தேர்வுக் குழுவின் கூட்டம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறையின் செயலாளர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
விருதுகளுக்கென பெறப்பட்ட விண்ணப்பங்களை தேர்வுக் குழு உறுப்பினர்கள் ஆய்வு செய்து வழங்கிய ஆலோசனைப்படி, 2021 ஆம் ஆண்டு சுதந்திர தினவிழாவின் போது பின்வரும் நபர்கள்/ நிறுவனங்களுக்கு தமிழக அரசின் மாநில விருதுகளை வழங்கலாம் என முடிவு செய்து அரசு அவ்வாறே ஆணையிடுகிறது.
சிறந்த மாவட்ட ஆட்சித் தலைவர்:
இன்னசென்ட் திவ்யா (நீலகிரி மாவட்டம்)
மதுசூதனன் ரெட்டி (சிவகங்கை மாவட்டம்)
விருது:
தலா 10 கிராம் எடையுள்ள தங்கப்பதக்கம், 25,000 ரொக்கப்பணம் மற்றும் சான்றிதழ்.
சிறந்த மருத்துவர்:
பூ.பத்மபிரியா (சேலம்)
விருது:
10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்.
வேலை வாய்ப்பளித்த தனியார் நிறுவனம்:
வி ஆர் யுவர் வாய்ஸ் (சென்னை)
விருது:
10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்.
அரசு சாராத தொண்டுநிறுவனம்:
ஹோலி கிராஸ் சர்வீஸ் சொசைட்டி(திருச்சி)
விருது:
10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ், 50 ஆயிரம் ரொக்கப் பரிசு.
சேவைபுரிந்த சமூகப் பணியாளர்:
மரிய அலாசியஸ் நவமணி (நாகர்கோவில்)
விருது:
10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்.
சிறந்த மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி:
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி (ஈரோடு)
விருது:
10 கிராம் எடையுள்ள தங்க பதக்கம் மற்றும் சான்றிதழ்.