கடலூர் மாவட்டத்தில் ஜனவரி 6-ம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு.!
கடலூர் மாவட்டத்தில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜனவரி 6-ம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஒவ்வொரு வருடமும் திருவாதிரை நட்சத்திரத்தை குறிக்கும் ஆருத்ரா தரிசனம் கொண்டாடப்படுவது வழக்கம், அதேபோல் இந்த ஆண்டும் கொண்டாடப்படும் இந்த ஆருத்ரா தரிசன விழாவை முன்னிட்டு நாளை தேரோட்டம் நடைபெறுகிறது.
மேலும் ஜன-6 ஆம் தேதி ஆருத்ரா தரிசனம் நடைபெறவுள்ளது. இதற்காக கடலூர் மாவட்டத்தில் அன்று பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அனைத்து பள்ளிகள், அரசு அலுவலகங்கள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு விடுமுறை என அறிவித்த மாவட்ட நிர்வாகம், விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜனவரி 28ம் தேதி நான்காவது சனிக்கிழமை வேலை நாளாக அறிவித்துள்ளது.