தமிழகம் மற்றும் புதுவையில் மிதமான மழைக்கு வாய்ப்பு!
தமிழகம் மற்றும் புதுவையில் கடந்த சில நாட்களாகவே வறண்ட வானிலையே நிலவி வந்த நிலையில், நாளை மற்றும் நாளை மறுநாள் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை அம்பாசமுத்திரம், மணிமுத்தாறு, கல்லிடைக்குறிச்சி, மாஞ்சோலை உள்ளிட்ட நெல்லையின் பல சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் மிதமான மழை பெய்தது. இந்த நிலையில், தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் இன்றும் நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு…!
அதைப்போல, மேலும், நாளை 21.01.2024 முதல் 25.01.2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். மேலும், தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஏற்கனவே அதிகாலை உறைபனி பொழுந்து வரும் நிலையில், இன்று மற்றும் நாளை உறைபனி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நிலவரம்
சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31-32 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 21-22 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
அதைப்போல அடுத்த 48 மணி நேரத்தை பொறுத்தவரையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது. சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவலை தெரிவித்துள்ளார்.