யானை தாக்கி உயிரிழந்த பாகனின் குடும்பத்திற்கு நிதியுதவி அறிவிப்பு..!
யானை தாக்கி உயிரிழந்த பாகன் பாலனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமில் உள்ள மசினி என்ற யானை தாக்கி அதன் பாகன் சி.எம்.பாலன் உயிரிழந்துள்ளார். யானைக்கு இன்று காலை உணவு அளிக்க அருகே சென்ற போது பாகனை திடீரென தாக்கியதில், பலத்த காயம் ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் வழியே பாகன் உயிரிழந்துள்ளார்.
மசினி யானை ஏற்கனவே 2019ல் சமயபுரம் கோவியிலில் இருந்தபோது பாகனை தாக்கி கொன்றதால், முதுமலை வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு வரபட்ட நிலையில்,இந்த சமபவம் நடந்துள்ளது.
பாகனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி
இந்த நிலையில், யானை தாக்கி உயிரிழந்த பாகன் பாலனின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும், அவரது மகனின் கல்வி தகுதிக்கேற்ப அரசு வேலை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.