#ELECTIONBREAKING: அமமுக கூட்டணியில் தேமுதிக போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு..!
தேமுதிக போட்டியிடும் 60 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய நிலையில் தேமுதிக அமமுக கூட்டணிக்கு சென்றது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், அமமுக – தேமுதிக கூட்டணி ஒப்பந்தத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
06.04.2021 அன்று நடைபெறவுள்ள தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தலில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகமும், தேசிய முற்போக்கு திராவிட கழகமும் கூட்டணி அமைத்து தேர்தலைச் சந்திப்பது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கும் இடையே இன்று ஏற்பட்ட ஒப்பந்தப்படி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில், தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு தமிழ்நாட்டில் கீழ்காணும் 60 (அறுபது) சட்டமன்றத் தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
இந்த தோழமை உடன்பாட்டை அடுத்து தேசிய முற்போக்கு திராவிட கழகத்திற்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அம்மா மக்கள் முன்னேற்றக் கழக வேட்பாளர்கள் திரும்பப் பெறப்படுகிறார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த உடன்படிக்கை ஒப்பந்தத்தில் தேமுதிக சார்பில் அவைத் தலைவர் இளங்கோவன், அமமுக சார்பில் துணை பொதுச்செயலாளர் செந்தமிழின் ஆகியோர் கையெழுத்திட்டனர்.
தேமுதிக போட்டியிடம் 60 தொகுதிகள்..! pic.twitter.com/CxOLeXAuIH
— Dinasuvadu Tamil (@DinasuvaduTamil) March 14, 2021