மிக்ஜாம் புயலால் மிதக்கும் சென்னை… மாற்று உதவி எண்கள் அறிவிப்பு!

HELP LINE NUMBERS

வங்கக்கடலில் உருவாகியுள்ள தீவிர புயலான மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூரில் விடாமல் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் சுற்றுவட்டாரத்தில் பெரும்பான்மையான இடங்களில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது.

இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல், கிட்டத்தட்ட 47 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. புயல் மற்றும் கனமழை காரணமாக தமிழக அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

மிக்ஜாம் புயல்: பாதிப்பு குறித்து கேட்டறிந்தார் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா!

பாதிக்கப்பட்ட இடங்களில் மாநில மற்றும் தேசிய பேரிடர் குழுக்கள் பணியில் ஈடுபட்டுள்ளனர். வரலாறு காணாத மழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளிக்கிறது. இடைவிடாத கனமழையால் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவனங்களுக்கு நாளை பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

நாளை புயல் கரையை கடக்கும் நிலையில், இன்று இரவுக்கு பிறகு படிப்படியாக மழை குறையும் என கூறியுள்ளனர். இந்த நிலையில், கனமழை பாதிப்பு தொடர்பான புகாருக்கு, 004-25619206, 004-25619207, 004-25619208 ஆகிய உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.  இதுபோன்று, 94454 77202 என்ற வாட்ஸ் அப் எண்ணிலும் மக்கள் புகார் தெரிவிக்கலாம். ஏற்கனவே, மழை பாதிப்பு தொடர்பாக அறிவித்த 1913 என்ற உதவி எண் வேலை செய்யவில்லை என்பதால், தற்போது மாற்று உதவி எண்களை அறிவித்துள்ளது சென்னை மாநகராட்சி.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்