#ELECTIONBREAKING: காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் அறிவிப்பு..!
காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு தொகுதி பங்கீடு முடிவடைந்த நிலையில், தற்போது எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தம் கையெழுத்தாகி வருகிறது. அந்த வகையில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு சட்டப்பேரவையில் 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தாகிய நிலையில், காங்கிரஸ் போட்டியிடும் 25 தொகுதிகள் இறுதி செய்யப்பட்டு சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
- பொன்னேரி(தனி)
- வேளச்சேரி
- தென்காசி
- ஸ்ரீபெரும்புதூர்(தனி
- சோளிங்கர்
- மேலூர்
- காரைக்குடி
- விளவங்கோடு
- ஓமலூர்
- உதகை
- ஊத்தங்கரை
- குளச்சல்
- ஈரோடு கிழக்கு
- அறந்தாங்கி
- விருத்தாசலம்
- உடுமலைப்பேட்டை
- கள்ளக்குறிச்சி (தனி)
- திருவாடானை
- மயிலாடுதுறை
- கோவை தெற்கு
- சிவகாசி
- ஸ்ரீ வைகுண்டம்
- கிள்ளியூர்
- நாங்குநேரி
- ஸ்ரீவில்லிபுத்தூர் (தனி) ஆகிய தொகுதிகள் காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.