ரூ2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல-துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம்
ரூ2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
இன்று சட்டசபையில் நடந்த விவாதத்தில் துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் பேசுகையில், உழைப்பாளர்கள் தொழிலாளர்களுக்கு ரூ2000 நிதி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்ததில் எந்த தவறும் கிடையாது.110 விதியின் கீழ் அறிவிக்க முதலமைச்சருக்கு அனைத்து உரிமைகளும் உள்ளன.
ரூ2000 வழங்கப்படும் என்ற அறிவிப்பு தேர்தலுக்காக அல்ல, வறுமை கோட்டுக்கு கீழே உள்ளவர்கள் பயன் அடைவதற்காக தான் என்று துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.