குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு! – டிஎன்பிஎஸ்சி

Published by
பாலா கலியமூர்த்தி

 டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.

.தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

இதனைத்தொடர்ந்து குரூப்-2, குரூப்-2A தேர்வுக்குக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சியிலும் வெளியிடப்படும் என்றும் TNPSC தெரிவித்திருந்தது. அதன்படி, பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதிவரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மே 21ம் தேதி <சனிக்கிழமை) குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.

நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.  தமிழ்நாடு தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வரும் 23-ஆம் தேதி (இன்று) தேர்வுகாண விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்றும் மார்ச் 23ஆம் தேர்வுகான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் எனவும் தேர்வாணையத்துறை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 116 Interview Post, 5413 Non Interview Post-க்கு மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது.

Published by
பாலா கலியமூர்த்தி

Recent Posts

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை! 

18 டன் சமையல் கியாஸ் லாரி கவிழ்ந்து விபத்து! மீட்பு பணிகள் தீவிரம்… பள்ளிகளுக்கு விடுமுறை!

கோவை : கேரளா மாநிலம் கொச்சினில் இருந்து கோவைக்கு சமையல் எரிவாயு எடுத்து வந்த டேங்கர் லாரியானது கோவை அவினாசி…

18 minutes ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு! இன்று முதல் பொங்கல் சிறப்பு தொகுப்பு டோக்கன் விநியோகம்!

சென்னை : ஆண்டுதோறும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு பொருட்களை வழங்கும்.…

1 hour ago

பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் : இந்தியா பேட்டிங்.. கேப்டன் ரோஹித்திற்கு அணியில் இடமில்லை!

சிட்னி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் தொடரில்…

2 hours ago

புத்தாண்டு ஏமாற்றம்… வந்தது குட் நியூஸ்! ரிலிஸுக்கு தயாரான ”விடாமுயற்சி” டிரைலர்!

சென்னை: இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ஜனவரி 10 ஆம் தேதி விடாமுயற்சி திரைப்படம் வெளியாகும் என முன்னதாக…

12 hours ago

“அரசு பேருந்துகளின் கட்டணம் அதிகரிப்பு” கர்நாடகா அமைச்சரவை ஒப்புதல்!

கர்நாடகா: கர்நாடக மாநிலத்தில் அரசு பேருந்து கட்டணம் 15% உயர்த்தப்படுவாக அம்மாநில போக்குவரத்துத்துறை அறிவித்துள்துய. அனைத்து மாநில சாலை போக்குவரத்து…

12 hours ago

வெளியானது ‘Rise Of Dragon’ பாடல்… வைப் செய்த பிரதீப் – கௌதம் மேனன்!

சென்னை: இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிக்கும் 'டிராகன்' படத்தின் முதல் சிங்கிளான "Rise Of Dragon"…

13 hours ago