குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணை வெளியீடு! – டிஎன்பிஎஸ்சி
டி.என்.பி.எஸ்.சி குரூப் 2, 2ஏ தேர்வுகளுக்கு இன்று முதல் மார்ச் 23ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
.தமிழகத்தில் அரசு துறைகளில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பதவிகளின் அடிப்படையில் குரூப் 1, குரூப் 2, குரூப் 3, குரூப் 4 மற்றும் குரூப் 5,6,7,8 போன்ற போட்டி தேர்வுகளை நடத்தி வருகிறது. தமிழகத்தில் கடந்த வருடம் கொரோனா காரணமாக அனைத்து போட்டித் தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டது. இதன்பின்னர், TNPSC குரூப்-2, குரூப்-2A, குரூப்-4 உள்ளிட்ட தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
இதனைத்தொடர்ந்து குரூப்-2, குரூப்-2A தேர்வுக்குக்கான அறிவிப்பு பிப்ரவரியிலும், குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பு மார்ச்சியிலும் வெளியிடப்படும் என்றும் TNPSC தெரிவித்திருந்தது. அதன்படி, பிப்ரவரி 23 முதல் மார்ச் 23 ஆம் தேதிவரை குரூப் 2 தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் மூன்று கட்டமாக தேர்வுகள் நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது. மே 21ம் தேதி <சனிக்கிழமை) குரூப் 2, குரூப் 2 ஏ தேர்வுகள் நடைபெறும் என்று டிஎன்பிஎஸ்சி அறிவித்திருந்தது.
நேர்முகத்தேர்வு பதவிகளுக்கு 116 இடங்களுக்கும், நேர்முக தேர்வு அல்லாத பதவிகளுக்கு 5413 இடங்களில் குருப் 2, குரூப் 2A பதவிகள் என மொத்தம் 5529 காலிப்பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது. தமிழ்நாடு தேர்வாணையத்தின் இணையத்தளத்தில் வரும் 23-ஆம் தேதி (இன்று) தேர்வுகாண விண்ணப்பங்கள் வெளியிடப்படும் என்றும் மார்ச் 23ஆம் தேர்வுகான விண்ணப்பங்களை சமர்பிக்க கடைசி நாளாகும் எனவும் தேர்வாணையத்துறை தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கான அறிவிப்பாணையை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று முதல் குரூப் 2, குரூப் 2ஏ தேர்வுகளுக்கு http://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் மார்ச் 23-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 116 Interview Post, 5413 Non Interview Post-க்கு மே 21-ம் தேதி காலை 9.30 மணிக்கு தேர்வு நடைபெற உள்ளது.