#அறிவிப்பு- அரசு ஊழியர்களில் இவர்களுக்கு மட்டும் 6 நாட்கள் தற்செயல் விடுப்பு!

Default Image

 சிறப்பு குழந்தைகளை வைத்திருக்கின்ற அரசு ஊழியர்களுக்கு 6 நாட்கள் சாதாரண விடுப்பு எடுக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவுப் பிறப்பித்துள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த மார்ச் மாதத்தில் பணியாளர் நிர்வாக சீர்திருத்தத் துறை மானியக்கோரிக்கையில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இது  குறித்து பேசியதாவது:

சிறப்பு பராமரிப்பு தேவைப்படும் குழந்தைகளை கொண்ட அரசு ஊழியர்கள் அக்குழந்தைகளின் நலன்களை பராமரிக்க மேற்கொள்ளுகின்ற சிரமத்தை குறைக்கும் நோக்கோடு அத்தகைய குழந்தைகளின் பெற்றோர்களாக இருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும் என்று அறிவித்திருந்த நிலையில் தற்போது  இதற்கான அரசாணையை பணியாளர் நிர்வாக சீர்திருத்தத்துறை செயலாளர் ஸ்வர்ணா வெளியிட்டு உத்தரவிட்டு உள்ளார்.

அவ்வுத்தரவில் சிறப்பு குறைபாடு கொண்ட குழந்தைகளை வைத்திருக்கும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு 6 நாட்கள் விடுப்பு எடுத்து கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.


	

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth