இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவியுங்கள் – எம்பி. ரவிக்குமார்.!
இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் விழுப்புரம் தொகுதியின் எம் பி ரவிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
தமிழகத்தில் மதுரையை இரண்டாவது தலைநகரமாக அறிவிக்க வேண்டும் என்று செல்லூர் ராஜூ, உதயகுமார் ஆகிய அமைச்சர்களும், காங்கிரஸ் மாநில தலைவரான கே. எஸ். அழகிரியும், திமுக எம்எல்ஏ சரவணனும் கோரிக்கை வைத்துள்ளனர்.அதற்கான ஆலோசனையை அரசு நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவிக்க வேண்டும் என்று விழுப்புரம் தொகுதியின் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் எம்.பி. ரவிகுமார் கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்த பதிவில் கூறியதாவது, தற்போது ஆளும் பாஜக அரசு பாராளுமன்றத்திற்கு சொந்தமான இடத்தில் புதிய நாடாளுமன்றம் கட்டுவதில் முனைப்புடன் உள்ளது. ஏற்கனவே சிறப்பு வாய்ந்த கட்டிடம் ஒன்று பாராளுமன்றத்திற்கென இருக்கையில் புதிதாக கட்ட வேண்டிய தேவை இல்லை என்று பலரும் கூறி வருகின்றனர். ஆனால் அதை அவர்கள் கேட்பதாக இல்லை. இந்தியாவில் இரண்டாவதாக நாடாளுமன்ற கட்டிடம் ஒன்று கட்ட வேண்டும் என்றால் அதை சென்னையில் கட்டுங்கள். குளிர்கால கூட்டத் தொடரை சென்னையில் நடத்துங்கள். வடமாநிலங்களை சேர்ந்த எம்பிக்கள் தென்னிந்திய பண்பாட்டை, வளர்ச்சியை நேரில் பார்த்து தமது மாநிலமும் இப்படி முன்னேற வேண்டும் என்ற உணர்வை பெறட்டும். இந்தியாவின் இரண்டாவது தலைநகரமாக சென்னையை அறிவியுங்கள். அதிகார பரவலாக்கத்துக்கு அது அடையாளமாக திகழும் என்று தெரிவித்துள்ளார். இவரது இந்த கருத்துக்கு பலர் ஆதரவுகளை கொடுத்து வருகின்றனர்.
https://www.facebook.com/WriterRavikumar/posts/10157254863607062