அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை…! என்ன காரணம்..?

Published by
லீனா

ஆளுநரின் கார் மீது கல் வீசி, கருப்பு கொடி வீசிய விவகாரத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கவர்னர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கிருக்க கூடிய தொண்டர்கள் நடத்திய தாக்குதல்  கிடையாது. மூன்று நாட்களாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்கள் கொடுத்த ஊக்கத்தால் தான் அங்கிருக்க கூடிய தொண்டர்கள் நடத்திய தாக்குதல். அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என தெரிவித்து இருந்தார்.

இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது; ஆளுநருக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்புக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை.

அரசியலமைப்புக்கு எதிரான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆளுநரின் செயல் அல்ல; ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியவர்கள்,அதை தடுக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

Recent Posts

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

வெற்றி யாருக்கு.? மும்பை அணி பௌலிங் தேர்வு.., பேட்டிங் செய்யும் ஹைதராபாத்.!

மும்பை : இன்றைய லீக் ஆட்டத்தில், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையே நடைபெற உள்ளது. இந்த…

2 hours ago

ரேஸிங்கில் தீவிரம் காட்டும் அஜித் குமார்.! தீவிர பயிற்சி வீடியோ…,

பெல்ஜியம்: GT4 தொடர் விரைவில் தொடங்கவுள்ள நிலையில், அஜித் குமாரின் பந்தயக் குழு பெல்ஜியத்தின் புகழ்பெற்ற சர்க்யூட் டி ஸ்பாவிற்கு…

2 hours ago

பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!

சென்னை : கடந்த ஏப்ரல் 8 ஆம் தேதி, தந்தை பெரியார் திராவிடர் கழகம் நடத்திய ஈ.வி. ராமசாமியை (பெரியார்)…

3 hours ago

வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!

சென்னை : வக்ஃப் திருத்த சட்டத்தின்படி புதிய உறுப்பினர்களை நியமனம் செய்யக் கூடாது என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. மேலும்,…

3 hours ago

நடுவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட டெல்லி பயிற்சியாளர்! எச்சரிக்கை கொடுத்து அபராதம் போட்ட பிசிசிஐ!

டெல்லி : நேற்று நடைபெற்ற ஐபிஎல் தொடரில் டெல்லி அணியும் ராஜஸ்தான் அணியும்மோதியது . இந்த போட்டி சூப்பர் ஓவர் வரை…

3 hours ago

உச்சநீதிமன்றம் என்ன சூப்பர் நாடாளுமன்றமா? கட்டத்துடன் கேள்விகளை வைத்த துணை குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர்!

டெல்லி :  உச்ச நீதிமன்றம், ஒரு முக்கியமான தீர்ப்பில், குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்கள் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க…

4 hours ago