அமித்ஷாவுக்கு கடிதம் எழுதிய அண்ணாமலை…! என்ன காரணம்..?
ஆளுநரின் கார் மீது கல் வீசி, கருப்பு கொடி வீசிய விவகாரத்தில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மயிலாடுதுறையில் கருப்புக்கொடி ஏந்தி திமுக மற்றும் கூட்டணி கட்சிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆளுநரின் கார் மீது கல் வீசியதாக கூறப்படுகிறது.
இந்நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், கவர்னர் மீது நடத்தப்பட்ட தாக்குதல் அங்கிருக்க கூடிய தொண்டர்கள் நடத்திய தாக்குதல் கிடையாது. மூன்று நாட்களாக திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்கள் கொடுத்த ஊக்கத்தால் தான் அங்கிருக்க கூடிய தொண்டர்கள் நடத்திய தாக்குதல். அதனால், முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ஆளுநரிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் அல்லது பதவி விலக வேண்டும் என தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு கடிதம் எழுதியுள்ளார். அக்கடிதத்தில், மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்கெட்டுவிட்டது; ஆளுநருக்கே இந்நிலை என்றால், சாமானிய மக்களின் பாதுகாப்புக்கு எந்த மாதிரியான அச்சுறுத்தல் ஏற்படும் என்பதை கற்பனை செய்துகூட பார்க்கமுடியவில்லை.
அரசியலமைப்புக்கு எதிரான திமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது ஆளுநரின் செயல் அல்ல; ஆளுநர் மீது தாக்குதல் நடத்தியவர்கள்,அதை தடுக்காதவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.
Letter to Hon Union Home Min Shri @AmitShah avl on the grave failure of @arivalayam govt in maintaining Law & Order in our state.
Today’s attack on Hon TN Gov’s convoy is unprecedented.
Despite our warnings for the past few days @CMOTamilnadu has chosen to turn a blind eye! pic.twitter.com/3FjiusGhDB— K.Annamalai (@annamalai_k) April 19, 2022