இன்று மாலை ஆளுநரை சந்திக்கிறார் அண்ணாமலை..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாலை 7 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார்.
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தலைமையில், பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டதற்க்கு கண்டனம் தெரிவித்து, இன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, மாலை 7 மணியளவில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியை சந்திக்க உள்ளார். இந்த சந்திப்பின் போது, பிரபு என்ற ராணுவ வீரர் படுகொலை செய்யப்பட்டது குறித்து புகாரளிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.