நாளை மறுநாள் கோவை செல்கிறார் அண்ணாமலை..!
தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்கிறார்.
கோவையில் நடைபெற்ற கார் வெடிவிபத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக பாஜக தரப்பில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இது தீவிரவாத தாக்குதல் என்றும் பாஜக தரப்பில் கூறப்படுகிறது.
இதற்கிடையில் பாஜக தலைவர் அண்ணாமலை நாளை மறுநாள் கோவை செல்லவுள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ‘கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால், பாஜக கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்.’ என பதிவிட்டுள்ளார்.
கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். @BJP4TamilNadu கோவை மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி, நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன். (1/2)
— K.Annamalai (@annamalai_k) October 29, 2022