“2026 தேர்தலில் திமுக மண்ணோடு வேரோடு துடைத்து எறியப்படும்” – அண்ணாமலை.!

விஜய்க்கு 'Y' பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டது ஏன்? செய்தியாளர்களிடம் அண்ணாமலை விளக்கம் அளித்துள்ளார்.

BJP - Annamalai

கோவை : 1998-ஆம் ஆண்டு, கோவை குண்டுவெடிப்பில் பலியானவர்களுக்கு, அஞ்சலி செலுத்தும் விதமாக, 27-ம் ஆண்டு புஷ்பாஞ்சலி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை, பாஜக இளைஞரணி தேசியத்தலைவர் தேஜஸ்வி சூர்யா, பாஜக மகளிரணி தேசியத்தலைவிவானதி சீனிவாசன் உட்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மேடையில் பேசிய அண்ணாமலை, 2026இல் தமிழகத்தில் அரசியல் மாற்றம் வரும். பாஜக ஒரு விஷயத்தை கையில் எடுத்தால் அரை நூற்றாண்டு ஆனாலும் செய்து முடிக்கும். தமிழகத்தில் மக்களின் உயிருக்கு பாதுகாப்பு இல்லை, மக்களின் உயிர், உடமையை காத்தவர் மோடி. இந்து மதத்தையும் இந்துக்களையும் அழிக்க துடிக்கும் ஒரு தீய சக்திக்கு ஆதரவாக செயல்பட்டு வருகின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறித்தும் எதிர் கட்சி குறித்தும் மேடையில் பேசிய அண்ணாமலை, “கோவை குண்டுவெடிப்பு சம்பவம் நடந்து நான்கு ஆண்டுகள் ஆகிறது தற்போது வரை அது சிலிண்டர் குண்டு வெடிப்பு என்று சொல்வதன் மூலம் யாரை காப்பாற்ற நினைக்கிறார் முதல்வர் ஸ்டாலின். 27 ஆண்டுகளுக்கு பின் டெல்லியில் வந்ததைப்போல் 2026இல் தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்கும்” என்று உறுதி அளித்தார்.

விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு – அண்ணாமலை விளக்கம்

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பின்போது அண்ணாமலையிடம் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “எல்லா கட்சியினரையும் போல தான் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. விஜயால் ஆளுநரை சந்திக்க வர முடியவில்லை, பரந்தூர் மக்களை சந்திக்க செல்ல முடியவில்லை.

அவர், பா.ஜ.க.வுக்கு சார்ந்தவரா? சாராத நபரா? என்பதெல்லாம் விஷயமல்ல. பாஜகவை எதிர்த்தாலும் உரிய பாதுகாப்பு வாங்கப்படும், நாடு முழுவதும் பல்வேறு கட்சி தவைர்களுக்கு மத்திய அரசு பாதுகாப்பு வழங்கியுள்ளது. தமிழக அரசு ஏன் விஜய்க்கு பாதுகாப்பு கொடுக்கவில்லை? என்று கேள்வி எழுப்பிய அவர், ”பொதுவாழ்வில் உள்ளவர்களுக்கு அச்சுறுத்தல் இருந்தால் பாதுகாப்பு அளிக்கப்படும், இதில் அரசியல் செய்ய நினைத்தால் அவர்களுக்கு அரசியல் புரிதல் இல்லை என்று அர்த்தம்” என்று கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்