புகழ்ந்து பேசிய அண்ணாமலை..மேடையில் வைத்தே பதிலடி கொடுத்த சீமான்!
இந்த தேசம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் என்னுடைய வீடு அதற்கு நன்றாக இருக்கவேண்டும் என சீமான் பேசியுள்ளார்.

சென்னை : செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூர் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற்ற சொல் தமிழா சொல் எனும் நிகழ்ச்சியில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் தமிழ் நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இருவரும் கலந்து கொண்டார்கள். ஒரே நிகழ்ச்சியில் ஒரே மேடையில் இருவரும் இருப்பது இது தான் முதல் முறை என்பதால் இது அரசியல் வட்டாரத்திலும் பேசு பொருளாக மாறியுள்ளது.
விழாவில் கலந்து கொண்டு பேசிய பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சீமான் அண்ணன் என புகழ்ந்து பேசினார். நிகழ்ச்சியில் பேசிய அண்ணாமலை ” சீமான் அண்ணனை அரசியல் கட்சித் தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் என சொல்வதை விட ஒரு போர்களத்தில் இருக்கும் தளபதி என சொல்வேன்.
எனக்கும், சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழை பார்க்கிறேன். அண்ணன் தமிழில் தேசியத்தை பார்க்கிறார். அவ்ளோதான் வித்தியாயசம். இருந்தும் எப்போதும் அண்ணன் சீமான் அவர்களுக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்து வருவதற்கான காரணம், தமிழக அரசியலில் நேர்மையும், நெஞ்சுறுதியும் கொண்ட தலைவர் சீமான்” என புகழ்ந்து பேசியிருந்தார்.
அவரை தொடர்ந்து பேசிய சீமான் ” தமிழகத்தில் பாஜக என்ற கட்சி இருக்கிறது அது வளர்கிறது என்று தன்னுடைய செயலாற்றலால் நிகழ்த்தி காட்டியுள்ளார் அன்பு இளவல் அண்ணாமலை. அவர் சொல்கிறார் இருந்து தமிழை பார்க்கிறேன். எங்க அண்ணன் தமிழகத்தில் இருந்து தேசியத்தை பார்க்கிறார் என்று சொல்கிறார். அவருக்கு நான் சொல்லிக்கொள்வது ஒன்றே ஒன்று தான் நான் முதலில் என் அம்மாவுக்கு மகனாக இருக்கிறேன். பின் அத்தைக்கு மருமகனாக இருக்கிறேன்.
இந்த தேசம் நன்றாக இருக்கவேண்டும் என்றால் என்னுடைய வீடு அதற்கு நன்றாக இருக்கவேண்டும். என்னுடைய வீடு நன்றாக இருக்கவேண்டும். உங்களுடைய வீடு நன்றாக இருக்கவேண்டும். அப்படி இருந்தாலே எல்லா வீடுகளும் நன்றாக இருக்கும். தாய் மொழியை கடுகளவு இருந்தாலும் மலை அளவுக்கு உயரும். தாய் மொழியை அழிய கொடுத்த இனங்கள் மலை அளவு இருந்தாலும் கடுகளவு வீழ்ந்துவிடும்.
இதனை மட்டும் உணர்ந்து கொள்ளவேண்டும். நீ கன்னடனா? மராட்டியாணா? மலையாளியா? தெலுங்கானா? பீஹாரியா? குஜராத்தியா? யாராகவேண்டுமானாலும் இரு ஆனால், நான் மராட்டியன் என்கிற திமிரோடு இரு. அந்த திமிரோடு இரு நீ நீயா இரு நான் நானாக இருக்கிறேன்” எனவும் சீமான் கூறியுள்ளார்.