மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை கண்டித்து பலரும் தங்களுடைய கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள். அந்தவகையில், அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் இன்று பெரியார் பிறந்தநாளையொட்டி சென்னையில் உள்ள அவருடைய சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் ” மறைந்த தலைவர்களை கொச்சைப்படுத்தி பேசுவது தவறான விஷயம்.
அதேபோல், நம்மளுடைய வரலாறு என்ன மற்றவர்களுடைய வரலாறு என்ன என்பது பார்க்க வேண்டும்.பேரறிஞர் அண்ணாவுக்கு பெரிய வரலாறு இருக்கிறது. அப்படி பட்ட பெயரிலேயே அண்ணா எனும் பெயரை அண்ணாமலை தன்னுடைய பெயரில் வைத்திருக்கும் போது அண்ணாவை பற்றி அவதூறு பேசகூடாது.
ஏனென்றால், அவர் பேசியது அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் எந்த தொண்டனும் சரி ஒரு ஏற்றுக்கொள்ள முடியாத விஷயம். எனவே நாங்களும் எங்களுடைய பதிலை கொடுத்து விட்டோம். இனிமேல் அதேபோன்று அண்ணாமலை விமர்சனமாக பேச மாட்டார் என எதிர்பார்க்கிறோம். ஏற்கனவே அம்மாவை பற்றி பேசினத்துக்கு தான் அண்ணாமலை வாங்கி கட்டிக்கிட்டாரு.
ஏற்கனவே நான் சில முறை பேசிவிட்டேன் திரும்பவும் இப்போது அதைப்பற்றி பேசிவிட்டோம். அவர் கட்சியை வளர்ப்பதற்காக பிரச்சினைகளைப் பற்றி ஆயிரம் பேசட்டும் அதைப் பற்றி எங்களுக்கு ஒன்றும் இல்லை. ஆனால் மறைந்த தலைவர்களை பற்றி கொச்சை படுத்தி பேசவே கூடாது இது தான் எங்களுடைய வேண்டுகோள்” என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். மேலும், ஏற்கனவே, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா குறித்து அண்ணாமலை பேசியதை கண்டித்து அதிமுக தீர்மானம் நிறைவேற்றியது என்பதும் குறிப்பிடத்தக்கது.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள "ஃபெஞ்சல்" புயலானது எப்போது கரையை கடக்கும்? எந்தெந்த மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருக்கிறது…
சென்னை :அசத்தலான சுவையில் முட்டை சேர்த்த மக்ரோனி செய்வது எப்படி என இந்த செய்தி குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்;…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள "ஃபெஞ்சல்" புயலானது மேற்கு திசையில் நகர்ந்து சென்னையிலிருந்து தென்கிழக்கே 100 கிலோ மீட்டர்…
சென்னை : கடந்த தீபாவளி அன்று வெளியாகி திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கும், ‘அமரன்’ படத்தின் OTT ரிலீஸ் எப்போது…
சென்னை : தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் "ஃபெஞ்சல்" புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (30-11-2024) காலை 830…
பெய்ரூட் : கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் ஹமாஸ் அமைப்பினருக்கும், இஸ்ரேலுக்கு இடையேயான போரானது தொடங்கியது. இந்த போரில்…