தமிழக முதல்வருக்கு வாழ்த்து தெரிவித்து அண்ணாமலை ட்வீட்..!
செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு பாஜக தலைவர் அண்ணாமலை வாழ்த்து.
சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் 44-ஆவது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28-ஆம் தேதி தொடங்கியது, செஸ் ஒலிம்பியாட் போட்டியின் தொடக்கவிழா மிகவும் பிரமாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில், பிரதமர் மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டனர்.
12 நாட்களுக்கு பின் நேற்றுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டிநிறைவடைந்தது. இந்த நிலையில், இதன் நிறைவு விழா கோலாகலமாக நேற்று நடைபெற்றது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள், செஸ் ஒலிம்பியாட் வெற்றிகரமாக நடத்தியதற்காக தமிழக முதல்வர் மற்றும் தமிழக அரசு அதிகாரிகளுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Winning the 1st ever medal in Chess Olympiad in the women’s section, Congratulations to the Indian women’s team of Koneru Humpy, Vaishali, Tania Sachdev and Bhakti Kulkarni.
Congratulations to Team India for winning the Gaprindashvili Cup for your collective performance (3/3)
— K.Annamalai (@annamalai_k) August 10, 2022