ரபேல் வாட்சை செய்தியாளர்களிடம் கழற்றி கொடுத்த அண்ணாமலை..!
செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களிடம் நீங்கள் எந்த சேனல் என கேட்டு மிரட்டும் வகையில் பேசிய அண்ணாமலை.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டார்.
அப்போது அண்ணாமலை அவர்களிடம் கேள்வி கேட்ட செய்தியாளர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். செய்தி சேகரிக்க வந்த செய்தியாளர்களிடம், யாராக இருந்தாலும் சேனல் பெயரையும், செய்தியாளர் பெயரையும் கூறிவிட்டு கேள்வி கேளுங்கள், கட்சி சேனல் நடத்துபவர்களிடம் பேச விரும்பவில்லை,
யூடியூப் சேனல் செய்தியாளர்கள் யாரும் என்னுடைய செய்தியாளர் சந்திப்புக்கு வர வேண்டாம். அவர்களை அலுவலகத்திற்கு விட வேண்டாம். 40 ஆயிரம் மதிப்பில் கேமரா வைத்திருந்தால் கேள்வி கேட்பீர்களோ? என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தான் கட்டி இருந்த ரபேல் வாட்சை செய்தியாளரிடம் கழற்றி கொடுத்து இதுகுறித்து விசாரிக்குமாறு தெரிவித்ததோடு, ஒட்டு கேட்டும் கருவி இதில் இருக்கிறதா என்று இந்த வார்த்தை எடுத்துச் சென்று சோதித்துப் பாருங்கள் என்றும் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் இந்த செயலால் சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது.