“பாஜக மாநிலத் தலைவர் போட்டியில் நான் இல்லை!” அண்ணாமலை பரபரப்பு பேட்டி!
தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் போட்டியில் நான் இல்லை புதியவர்கள் வரும் போது நான் பேசுகிறேன் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களிடம் கூறியுள்ளார்.

கோவை : தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல் அடுத்த வருடம் நடைபெற உள்ளதை முன்னிட்டு பல்வேறு அரசியல் மாற்றங்கள் தமிழகத்தில் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அதில் முக்கியமாக தமிழ்நாட்டில் பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுகவில் நாள் தோறும் ஏதேனும் ஒரு நிகழ்வு நடைபெறுகிறது.
இதில் கடந்த 2021 சட்டமன்ற தேர்தல் போல மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி இருக்கும் என கூறப்பட்டது. அதற்கேற்றாற் போல அதிமுக மூத்த தலைவர்கள் டெல்லியில் பாஜக தேசிய தலைமையை சந்தித்து பேசினர். அப்போது, அவர்கள் பாஜக தமிழ்நாடு தலைவரை மாற்ற வேண்டும் என கூறியதாக பல்வேறு யூக செய்திகள் வெளியாகின. மேலும், அதிமுக தலைவர்கள் டெல்லி சென்ற பிறகு பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையும் டெல்லி சென்றார். இதனால் அந்த யூகங்கள் வலுத்தது.
இப்படியான சூழலில் தான் அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகிவிட்டது. பாஜக மாநிலத் தலைவர் மாற்றப்படுகிறார். புதிய தலைவராக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் பதவி ஏற்க உள்ளார் என்றெல்லாம் செய்திகள் வெளியாகின.
இந்நிலையில், இன்று கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையிடம் அதிமுக – பாஜக கூட்டணி, தலைவர் மாற்றம் பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “அதனை பற்றி நான் கருத்து சொல்ல விரும்பவில்லை. என்னை பொறுத்தவரையில் இந்த கட்சி நல்லா இருக்கனும். நல்லவர்கள் இருக்கக் கூடிய கட்சி. நல்ல ஆத்மாக்கள் இருக்கக் கூடிய கட்சி,
இந்த கட்சியில் நிறைய பேர் உயிரை கொடுத்து கட்சியை வளர்த்துள்ளார். நிறைய புண்ணியவர்கள் இருக்கக் கூடிய கட்சி, இந்த கட்சி எப்போதும் நன்றாக இருக்க வேண்டும் என நினைக்கிறன். புதிய தலைவர் தேர்வு செய்யப்படும்போது நான் நிறைய பேசுவேன். நான் மாநிலத் தலைவர் போட்டியில் இல்லை. ” என திட்டவட்டமாக கூறினார்.
இதனால் தமிழநாடு பாஜகவுக்கு புதிய தலைவர் விரைவில் தேசிய தலைமையால் நியமிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. யார் அந்த தலைவர், அப்படி மாற்றப்பட்டால் அண்ணாமலைக்கு என்ன பொறுப்பு வழங்கப்படும் என்ற பல்வேறு கேள்விகள் தமிழக அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
குட் பேட் அக்லி முதல் நாளில் எவ்வளவு வசூல் செய்யும்?
April 10, 2025