விஜய் சேதுபதிக்கு ஆதரவாக களமிறங்கும் அண்ணாமலை!
முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை.
தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான விஜய் சேதுபதி, இலங்கையின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கிறார். இந்த படத்திற்கு “800” என பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியான நிலையில், அந்த போஸ்டரில் முரளிதரன் தோற்றத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருப்பது போல் வெளியானது.
இந்நிலையில், முரளிதரன் இலங்கை நடைபெற்ற போராட்டத்தில் இலங்கை அரசுக்கு ஆதரவாக செயல்பட்டவர் என்ற தமிழகத்தில் பலரும் குற்றம்சாட்டி வருகின்றனர். இதனையடுத்து, இந்த படத்தில் விஜய் சேதுபதி நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இந்நிலையில், பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை அவர்கள் இதுகுறித்து கூறுகையில், ‘முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பது விஜய் சேதுபதியின் தனிப்பட்ட உரிமை. அதில் அரசியலை கலப்பது சரியல்ல.’ என தெரிவித்துள்ளார்.